Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல் பருவத் தேர்வு காலஅட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா போன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்திருந்தது. முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதத்திலும், 2-ம் பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் என்றும் கூறியிருந்தது.

அப்ஜெக்டிவ் முறையில் தேர்வு

அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல்பருவ தேர்வுக்கால அட்டவணை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புதேர்வு நவ.30 தொடங்கி டிச.11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் பருவத் தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் 2-ம் பருவத் தேர்வு அப்போதைய சூழலைப் பொறுத்து அப்ஜெக்டிவ் முறையிலோ அல்லது விரிவாக விடையளிக்கக் கூடிய தேர்வாகவோ நடத்தப்படும் என சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x