Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

கேசிஜி கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா: நார்வே முன்னாள் அமைச்சர் பட்டம் வழங்கினார்

கேசிஜி கல்லூரி 19-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றவர்கள்.

சென்னை

கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நார்வே நாட்டின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹிம் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, பேஷன் தொழில்நுட்ப பாடப் பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.

இந்தியாவுக்கான நார்வே தூதர் ஹன்ஸ் ஜேக்கப் பிரைய்டென்லண்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பிடம் பெற்ற 60 மாணவர்கள் பட்டங்களை நேரில் பெற்றுக் கொண்டனர். 1467 பேர் காணொலி வாயிலாக பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தனர்களாக ஸ்டார்ட் இன்பினிட்டி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான எம்.எஸ்.பாலா, நார்வே கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகர் ஜினா லண்ட், ஹிந்துஸ்தான் கல்விக் குழும தலைவர் எலிசபெத் வர்கீஸ், கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் ஆனி ஜேக்கப் ஆகியோர் பங்கேற்றனர்.

ஹிந்துஸ்தான் கல்விக் குழும இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தலைமை உரையாற்றும்போது, “கல்வி பயில்வதை மாணவர்கள் தொடர் நிகழ்வாகக் கொண்டு படிக்க வேண்டும். வேகமாக மாறி வரும் உலகத்துக்கு ஏற்றாற்போல் புதுப்புது விஷயங்களை கற்றுத் தேர்ந்து, தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்” என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

பட்டம் பெற்ற மாணவர்களில் 18 பேர் பல்கலைக்கழக விருதுகளைப் பெற்றனர். சிறப்பான இடம்பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் பி.தெய்வசுந்தரி கல்லூரியின் கொள்கை, நோக்கம், கல்விச் சாதனைகள் ஆகியவற்றை பட்டியலிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x