Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

கோலடி அரசு தொடக்கப் பள்ளியில் புத்தக கொலு: ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்த மாணவர்கள், பெற்றோர்

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே கோலடியில் செயல்படுகிறது வில்லிவாக்கம் ஊராட்சிஒன்றிய தொடக்கப் பள்ளி. இப்பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளால் கரோனா பரவல்காலத்துக்கு முன்பு 284 ஆக இருந்தமாணவ-மாணவியர்களின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கோலடி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு புத்தக கொலுவை அமைத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

பல்வேறு தலைப்புகளில் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்மூலம் அமைக்கப்பட்டுள்ளது இந்த கொலு.

"புத்தகம் படிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் புத்தக கொலு அமைக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறுகிறார் தலைமையாசிரியர் தேவி.

விஜயதசமி விழாவை முன்னிட்டு, மாணவர் சேர்க்கைக்காக பள்ளிக்கு வரும் மாணவர்களும், பெற்றோர்களும் புத்தக கொலுவை கண்டு மகிழ்வதோடு, தாங்கள் விரும்பிய புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து மகிழ்கின்றனர்.

இந்த புத்தக கொலு தொடக்க விழாவில், பெற்றோர் ஆசிரியர் குழுதலைவர் துரை, பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரபா,பள்ளி மேலாண்மை குழு கண்காணிப்பு குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, பள்ளி தலைமையாசிரியை தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x