Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி: அக்.22-க்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

சென்னை

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ முன்னிட்டு ‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கான ஆன்லைன் விநாடி வினா போட்டியை நடத்துகின்றன.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ அக்.26 முதல் நவ.1 வரை கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, ‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ - மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தஆண்டு ‘சுதந்திர இந்தியா@75: நேர்மையுடன் கூடிய தன்னம்பிக்கை’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கில் விநாடி வினா போட்டியை நடத்துகின்றன.

இப்போட்டியில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவ - மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம்வகுப்பு மாணவ - மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். ஜூனியர்களுக்கான போட்டி அக்.24காலை 10 முதல் 12 மணி வரையிலும், சீனியர்களுக்கான போட்டி அக்.24-ம் தேதி மாலை 2 முதல் 4 மணி வரையிலும் நடைபெறும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க https://www.htamil.org/00074 என்ற லிங்க்கில் பதிவு செய்தால், போட்டிகுறித்த விவரங்கள் ஆன்லைன் இணைப்பில் வழங்கப்படும். பங்கேற்க பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும். பதிவுசெய்ய கடைசி நாள் அக்.22. இப்போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக ‘எக்ஸ் க்யூஸ் ஐடி’ இணைந்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 82487 51369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x