Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்றுமுதல் கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளில் பொதுப் பிரிவில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதன்படி தரவரிசைப் பட்டியலில் எண் 1 முதல் 14,788 வரை உள்ளவர்களுக்கு இன்றுமுதல் அக். 5 தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. 14,789 முதல் 45,227 வரை உள்ளவர்களுக்கு அக்.1 முதல் அக். 9 வரையில் இரண்டாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

எண் 45,228 முதல் 86,228 வரை உள்ளவர்களுக்கு அக். 5 முதல் அக். 13 வரையில் மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து, எண் 86,229 முதல் ஒரு லட்சத்து 36,973 வரை உள்ளவர்களுக்கு அக். 9 முதல் அக்.17 வரையில் 4-வது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொழிற்கல்விப் பிரிவில் சேரவுள்ள மாணவர்கான கலந்தாய்வும் இன்று தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x