Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

ரஷ்ய பல்கலை.களில் உதவித்தொகையுடன் படிக்க ரஷ்ய அறிவியல் கலாச்சாரம் மையம் அழைப்பு

சென்னை

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் கல்வி உதவித் தொகையுடன் உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அறிவியல் மற்றும் கலச்சார மையம் வெளியிட்ட அறிவிப்பு: ரஷ்யாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, பிஎச்.டி. உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அந்த நாட்டு அரசால் கல்வி உதவித்தொகைவழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும்கல்வியாண்டில் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளை பயில விரும்பும் மாணவர்கள் https://education-in-russia.com என்ற இணையதளம் வழியாக நவ. 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவர் எத்தனை பல்கலைக்கழகங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 100 சதவீதம் கல்விஉதவித் தொகை அளித்து இலவச கல்வி தரப்படும்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார அறிவியல் மையத்தில் இன்று (செப்.20) மாலை 4 மணிக்கு சிறப்பு இணையவழி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் https://us02web.zoom.us/j/89518987185?pwd=MFpwdkZuYlNZbENEWE9BWENYNnJBdz09 என்ற வலைத்தளம் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்று சேர்க்கை தொடர்பான தகவல்களை அறியலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 91-44-24990050 என்ற எண் அல்லது ruslang.chennai@ind.rs.gov.ru என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x