Published : 19 Sep 2021 03:12 AM
Last Updated : 19 Sep 2021 03:12 AM

இந்து தமிழ் திசை இணைந்து வழங்கும் HT Codeathon 2021

கோடிங் என்பது நவீன கால முக்கிய திறன்களில் ஒன்று.கோடிங் என்பதை கம்ப்யூட்டர் புரோகிராமிங் என்றும் புரிந்துகொள்ளலாம். கம்ப்யூட்டர்களுடன் மனிதர்கள் தொடர்புகொள்வதற்கான வழி இதுவே. கம்ப்யூட்டர்கள் அபாரமான திறன் மிக்கவை என்றாலும், மனிதர்கள் மொழியை அவற்றால் புரிந்துகொள்ள முடியாது. கம்ப்யூட்டருடன் தனி மொழியில் பேச வேண்டும்.

இப்படி கம்ப்யூட்டருக்கு புரிந்த மொழியில் கட்டளைகளை உருவாக்கி, அவற்றை இயக்குவதற்கான வழிகளை உருவாக்க கோடிங் உதவுகிறது. என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என கம்ப்யூட்டருக்கு வழிகாட்டும் வகையில் கோடிங் அமைகிறது.

கோடிங்கை உருவாக்குவதன் மூலம்கம்ப்யூட்டர்களை நாம் விரும்பும் வகையில்செயல்படவைக்க முடியும்.கம்ப்யூட்டர்கள்நவீன வாழ்க்கையின் தவிர்க்க இயலாத அங்கமாகி இருக்கும் நிலையில், தற்கால மாணவர்களுக்கான வருங்கால திறனாக கோடிங் அமைகிறது.

கோடிங் மூலம் மாணவர்கள் கம்பயூட்டர்களை இயக்கும் புரோகிராம்களை உருவாக்க கற்றுக்கொள்ளலாம் என்பதோடு,அவர்கள் படைப்பாற்றல் வெளிப்படவும் வழிவகுக்கும். மாணவர்கள் விரும்பிய வகையில் புதுமையான செயலிகள், இணையதளங்கள் போன்றவற்றை உருவாக்கலாம். கோடத்தான் என்பது கோடிங் திறனுக்கான போட்டி. இந்தப் போட்டி கோடிங் தொடர்பான ஆர்வம், திறமையை வளர்த்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் வாய்ப்பாக திகழ்கின்றன.

HT Codeathon

HT Codeathon இந்தியாவின் மிகப்பெரிய கோடிங் ஒலிம்பியாட்களில் ஒன்று. மாணவர்கள் கோடிங் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக HT Codeathon அமைவதோடு, திட்டங்களை உருவாக்கி போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்லவும் வழிசெய்கிறது.

கடந்த ஆண்டு HT Codeathon போட்டியில் இந்தியா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். HT Codeathon 2020 மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கும் பெரும் வெற்றியாக அமைந்தது. இண்டர்நேஷனல் நியூஸ் மீடியா அசோசியேஷன் (ஐ.என்.எம்.ஏ) 2021இல் இது 4 விருதுகளை வென்றது.

HT Codeathon 2020 -க்கு ஐ.என்.எம்.ஏவில் கிடைத்த விருதுகள்

சிறந்த நிகழ்ச்சி (தெற்காசியா) செய்தி பிராண்டை உருவாக்க சிறந்த நிகழ்ச்சி பயன்பாடு (தேசிய பிராண்ட்கள்- முதல் இடம்).

விளம்பர விற்பனையை அதிகரிக்க சிறந்த ஐடியா (தேசிய பிராண்ட்கள்- முதல் இடம்).

சிறந்த பொருள் மற்றும் தொழில்நுட்ப புதுமை (தேசிய பிராண்ட்கள்- மூன்றாம் இடம்).

இந்த விருதுகள் தவிர HT Codeathon 2020 பயனர்கள் பதிவு பிரிவில் சிறந்த முயற்சிக்கான கவுரவ பதிவையும் வென்றது. எதிர்கால மொழியாக கருதப்படும் கோடிங் 21-ம்நூற்றாண்டில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு தேவையான முக்கிய திறன்களில் ஒன்றாக அமைகிறது. இளம் கோடர்களுக்கு சுவாரஸ்யமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கோடிங் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான சிறந்த களமாக HT Codeathon அமைகிறது.

HT Codeathon பங்கேற்பாளர்களின் கருத்து

“பெருந்தொற்று சூழலில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலையில், இதற்கு முன் இல்லாத வகையில் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க தொடங்கியிருக்கிறோம். எதிர்காலம்தொழில்நுட்பம் சார்ந்தது எனும் நம்பிக்கையை இது வலுவாக்கியுள்ளது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை, 21-ம் நூற்றாண்டு திறன்களில் ஒரு பகுதியாக 6-ம் வகுப்பு முதல் கோடிங் திறனை மாணவர்களுக்கு கற்பிக்க வழிசெய்கிறது. மாணவர்கள் மத்தியில் கோடிங் ஆர்வத்தை வளர்க்க ஹெச்.டி. மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அலசல் தன்மை கொண்டவர்களாக மாணவர்களை மாற்றி, உலகம் தொடர்பான பார்வையை மாற்றும் என நம்புகிறேன். கட்டமைக்கப்பட்ட முறையில் யோசிக்கத் தொடங்கி, தர்க்க அறிவை அவர்கள் கூர்தீட்டிக் கொள்வார்கள்”.

-மஞ்சுள் ராணா முதல்வர், இயக்குநர் சேத் அனந்தரம் ஜெய்பூரியா பள்ளி, வசுந்திரா, காஸியாபாத்.

“கோடிங்கில் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு இத்தகைய நல்ல வாய்ப்பை அறிமுகம் செய்துள்ள முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி. கோடிங் தொடர்பான வீடியோக்கள் பயனுள்ளதாக இருந்தன. இவற்றை எங்கிருந்தும் பயன்படுத்தலாம். விநாடி வினாக்களும் சுவாரஸ்யமாக இருந்தன. அறிமுக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கோடத்தான் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தினார். கோடிங்கில் பரிச்சயம் இல்லாதவர் என்ற முறையில் இது என்னைப் பெரிதும் ஈர்த்தது”.

- ரீத் ஜோதி, 9 ம் வகுப்பு, டி.பி.எஸ். நொய்டா

HT Codeathon 2021

கடந்த ஆண்டு நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து, HT Codeathon 2021 நிகழ்ச்சியை இன்னும் பெரிதாக நடத்த தயாராகி வருகிறோம். இந்த ஆண்டு 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்று பரிசுகளை வெல்லலாம். செயலிகள், கேம்கள், இணையதளங்களை உருவாக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெறுவார்கள். அவர்கள் தங்கள் கோடிங் திறனை வெளிப்படுத்தி அருமையான பரிசுகளை வெல்லலாம்.

மாணவர்கள் பதிவு செய்துகொள்ளக்கூடிய மூன்று விதமான பயிற்சி திட்டங்கள்:

4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஆப் இன்வெண்டர் மூலம் செயலிகளை உருவாக்க கற்றுக்கொள்வார்கள்.

6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் ஹெச்.டி.எம்.எ,. சிஎஸெஸ், ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பூட்ஸ்டிரேப் கொண்டு இணையதளம் உருவாக்க கற்றுக்கொள்வார்கள்.

8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் பைத்தான், PyGame, PyKyra , Pyglet கொண்டு கேம்கள் உருவாக்க கற்றுக்கொள்வார்கள்.

HT Codeathon 2021 க்கு பதிவுசெய்து கொள்ளும் மாணவர்கள், சுயமாக கற்றுக்கொள்ள வழிகாட்டும் ஆன்லைன் வீடியோக்களைப் பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள். மேலும் பயிற்சிக்காக IDE வாய்ப்பை பெறலாம். எல்லா மாட்யூல்களையும் முடித்தப் பிறகு மாணவர்கள் தகுதிச்சுற்றில் பங்கேற்கலாம். இவர்களில் இருந்துமுன்னணி 103 மாணவர்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்று, HT Codeathon 2021 சிறந்த கோடர் விருதை வெல்லும் வாய்ப்பை பெறலாம்.

பதிவு செய்வதற்கான கடைசித் தேதி

நவம்பர் 15, 2021; பதிவு செய்ய https://bit.ly/3gMI36j இந்த போட்டியில் தாங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை மாணவர்கள் தங்களுக்கான டேஷ்போர்டில் பார்வையிடலாம்.

பயிற்சி திட்டம் செப்டம்பர் மத்தியில் தொடங்கி, கற்றல் பகுதி நவம்பர் மாதம் மத்தி வரை தொடரும். கற்றல் பகுதிக்குப் பிறகு மாணவர்கள் தகுதிச்சுற்றில் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு குழுவிலும் HT Codeathon ஆன்லைன் தகுதிச்சுற்று மூலம் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இறுதிப்போட்டியில் ஒவ்வொரு குழுவிலும் தகுதிபெற்ற 100 மாணவர்கள் முதல் மூன்று இடங்களுக்கு போட்டியிடுவார்கள்.

தமிழ்நாடு/ புதுச்சேரி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை- இந்த மாநிலங்களைச் சேர்ந்த முதல் மூன்று மாணவர்கள் தகுதிச்சுற்று இல்லாமல் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம்.

இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் 103 மாணவர்கள், டிசம்பரில் போட்டியில் பங்கேற்பார்கள்.

HT Codeathon 2021-ல் பங்கேற்க, கற்க, பரிசை வெல்ல தயாராகுங்கள். மேலும் விவரம் அறிய: contesttamil@hindutamil.co.in.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x