Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM

தொலைதூரக் கல்வி பருவத்தேர்வு: நாளை ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை

சென்னை பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான நடப்பு பருவத் தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் இருந்து நாளை (செப். 20) முதல் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களையும் இந்தஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக நடப்பு பருவத்தேர்வுகள் இணையவழியில் நடைபெறும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x