Published : 18 Sep 2021 06:57 PM
Last Updated : 18 Sep 2021 06:57 PM

டிஆர்பி தேர்வு மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) , கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) ஆகிய பணிகளுக்கான 2,207 காலி இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பல்வேறு பாடங்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) , கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) நியமிக்கப்பட உள்ளனர். 1,960 காலிப் பணியிடங்களுடன் ஏற்கெனவே காலியாக இருந்த 247 இடங்களுடன் சேர்த்து, 2,207 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

பாடவாரியாக உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்:
1. தமிழ் - 271
2. ஆங்கிலம் -192
3. கணிதவியல் -114
4. இயற்பியல் - 97
5. வேதியியல் - 191
6. விலங்கியல் -109
7. தாவரவியல் - 92
8. பொருளாதாரவியல் - 289
9. வணிகவியல் - 313
10. வரலாறு - 115
11. புவியியல் - 12
12. அரசியல் அறிவியல் - 14
13. வீட்டு அறிவியல் - 03
14. இந்திய கலாச்சாரம் - 03
15. உயிர் வேதியியல் - 01,
16. உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) - 39
17. கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) - 44 என மொத்தம் 2,207 காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். 40 வயதினைக் கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம்- ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு- ரூ.250.

இதற்கான தேர்வுகள் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கு ஆன்லைனில் இன்று (18.09.2021) முதல் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 17.10.2021 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: http://trb.tn.nic.in''.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x