

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17 முதல் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''2019- 2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 17.09.2021 அன்று முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள, பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பள்ளியில் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினைக் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்''.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.