பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் செப்.13-ல் வெளியீடு; மாற்றுத்திறனாளி மாணவர்களும் காணலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் செப்.13-ல் வெளியீடு; மாற்றுத்திறனாளி மாணவர்களும் காணலாம்
Updated on
1 min read

மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத்தேர்வு தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப்.13 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடைபெற்ற ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக 13.09.2021 (திங்கள்கிழமை) காலை 11.00 மணி முதல் இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே மாற்றுத் திறனாளித் தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட வழிமுறையில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து, தங்களது தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம்.

வழிமுறைகள் பின்வருமாறு:

1. தேர்வர்கள் வருகிற 13.09.2021 (திங்கள்கிழமை) காலை 11.00 மணி முதல் தமது மதிப்பெண் பட்டியலை y www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2. மேற்படி இணையதள முகவரிக்குள் லாகின் செய்தவுடன் ரிசல்ட் தோன்றும். அதில் “HSE Second Year Supplementary Exam, Aug 2021 - Result - Statement Of Marks Download” என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது
தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆகஸ்ட் 2021, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 15.09.2021 (புதன்கிழமை) மற்றும் 16.09.2021 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in