Published : 07 Sep 2021 12:38 PM
Last Updated : 07 Sep 2021 12:38 PM

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

புதுடெல்லி

2021-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. இதை மாணவர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, கரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 10 வரை https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று இரவு வெளியானது. இதை மாணவர்கள் https://admissions.nic.in/admit/neetadmitcard/DownloadAdmitCard/logindob.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgATm16WDSuAdfwpi7ZXy4cMJM6H2YIPeeiD4L60oHIp0 என்ற இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.

நீட் முதுகலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டும் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x