Last Updated : 03 Sep, 2021 07:23 PM

 

Published : 03 Sep 2021 07:23 PM
Last Updated : 03 Sep 2021 07:23 PM

மதுரை மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது: செப்.5-ல் வழங்க ஏற்பாடு

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 13 பேர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்.5ஆம் தேதி மதுரையில் விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்காக, மதுரை மாவட்டத்தில் 5 பெண் ஆசிரியைகள் உட்பட 13 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மதுரை திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் க.கர்ணன், அ.பூச்சிப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.சுப்பிரமணியன், மதுரை லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் ரா.சே.முரளிதரன், எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் த.சரவணன், பொய்கைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சா.அருள்ராஜ், நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் வே.ம.விநாயகமூர்த்தி, மேலூர் தமிழரசி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சிவக்குமார், முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ம.முருகேஸ்வரி, மதுரை ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சு.லதா, திருமங்கலம் மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சி. மகேசுவரி, மதுரை மேலப்பொன்னகரம் முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை மு.பரமேசுவரி, லட்சுமிபுரம் டிவிஎஸ் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை பி.ஜெயந்தி, தபால் தந்தி நகர் விரிவாக்கம் புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் க.மதிவாணன் ஆகிய 13 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியர்கள் தலைமையில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் முன்னிலையில் நல்லாசிரியர் விருது வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையிலும் செப்.5ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அனீஷ்சேகர், அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும் என மதுரை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x