Published : 25 Aug 2021 05:02 PM
Last Updated : 25 Aug 2021 05:02 PM

அரிய வானியல் நிகழ்வான நிழல் இல்லா நாள்: உடுமலையில் தென்பட்டது

வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வரும் பூஜ்ஜிய நிழல் தினம் இன்று (ஆக.25) உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் உற்றுநோக்கப்பட்டது. இன்று மதியம் சரியாக 12.24 மணியளவில் சூரியனின் நிழலானது சரியாக நேர்க்குத்தாகக் கீழே விழுந்தது.

சூரியனை வைத்துப் பல்வேறு பொருட்களுடைய நிழலின் நீளங்களை உற்றுநோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும். ஒரு வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டுமே பொருளின் நிழல், அப்பொருளுக்கு மிகச் சரியாகக் கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலை உச்சி வேளையில் காண இயலாது. அந்த நாட்கள் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த நாளை உற்றுநோக்குவதன் மூலம் நம்மால் சூரியனின் இயக்கம், பூமியின் ஆரம், பூமியின் நேரம், நாம் இருக்கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றைக் கண்டறியலாம். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் பூமியின் விட்டத்தைக் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வரும் பூஜ்ஜிய நிழல் தினம் இன்று (ஆக.25) உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் உற்றுநோக்கப்பட்டது. இன்று மதியம் சரியாக 12.24 மணியளவில் சூரியனின் நிழலானது சரியாக நேர்க்குத்தாகக் கீழே விழுந்தது.

இதுபோன்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதால் அறிவியல் மனப்பான்மையையும், ஆராய்ச்சி சிந்தனையையும் குழந்தைகளிடம் வளர்க்க முடியும். இன்று உடுமலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் இந்த அரிய நிகழ்வினை உற்றுநோக்கினர். மேலும், கலிலியோ அறிவியல் கழகத்திற்குப் புகைப்படங்களையும் அனுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x