Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

அமெரிக்க தூதரகம் சார்பில் கல்விக் கண்காட்சி: இணையவழியில் ஆக. 27-ல் நடைபெறுகிறது

அமெரிக்க தூதரகம் சார்பில் இணையவழியிலான கல்விக் கண்காட்சி வரும் 27 மற்றும் செப்டம்பர் 3-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

சென்னை அமெரிக்க துணைத்தூதரகம் சார்பில், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான கல்விக் கண்காட்சி ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க துணைதூதர் ஜுடித் ரேவின் கூறும்போது,“அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் தொடர்பான கல்விக் கண்காட்சி ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5.30 முதல் 10.30 மணி வரை இணையவழியில் நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/EdUSAFair21EmbWeb என்ற வலைதளத்தில் பதிவு செய்யலாம்:

அதேபோல, பட்டப் படிப்புகள் குறித்த கண்காட்சி செப்டம்பர் 3-ம் தேதி மாலை 5.30 முதல் 10.30 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் https://bit.ly/UGEdUSAFair21EmbWeb என்ற தளத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்.

அமெரிக்காவில் 4,500-க்கும் அதிகமான பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் உள்ளன. எனவே, இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கண்காட்சியில் பல்கலைக்கழக சேர்க்கை வழிமுறைகள், நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம்” என்றார். கூடுதல் தகவல்களுக்கு maya@usief.org.in. என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x