Published : 20 Aug 2021 03:16 PM
Last Updated : 20 Aug 2021 03:16 PM

புதுவை பல்கலை. சமுதாயக் கல்லூரியில் ஆக.26 முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்

புதுச்சேரி

புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை வரும் 26-ம் தேதி முதல் இணைய வழியில் நடக்கிறது.

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சிக் கல்லூரியான புதுவைப் பல்கலைக்கழகச் சமுதாயக் கல்லூரியில், இளங்கலைப் படிப்புகளாக கணினி பயன்பாடுகள், வணிக நிர்வாகம், உயிர் வேதியியல், ஊடகவியல், வணிகவியல் ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இளங்கலை மருத்துவத் தொழில்நுட்பப் படிப்புகளில் இதயப் பரிசோதனை தொழில்நுட்பம், அறுவை சிகிச்சைக்கூடத் தொழில்நுட்பம், சிறுநீரக ரத்த சுத்திகரிப்புத் தொழில்நுட்பம், கதிர்வீச்சு மற்றும் நிழற்படத் தொழில்நுட்பம், கண் பார்வை சம்பந்தமான மருத்துவத் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சேவைத் தொழில்நுட்பம். கணினி மென்பொருள் மேம்பாட்டுத் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் உள்ளன.

பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம், சுகாதார ஆய்வாளர், பத்திர எழுத்தர், யோகா, நாடகம் மற்றும் அரங்கக் கலைகள், கர்நாடக இசை (பாட்டு), பரதநாட்டியக் கலை ஆகிய படிப்புகள் உள்ளன.

மாணவர்கள் இங்கு 2021- 2022ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை இணையவழியாக அனுப்பலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://pucc.edu.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x