Published : 19 Aug 2021 01:57 PM
Last Updated : 19 Aug 2021 01:57 PM

புதுவைப் பல்கலை.யில் முதுகலை, பிஎச்டி விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலைப் பட்டயப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இங்கு படித்து வருகின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.

சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14 கடைசித் தேதியாக இருந்தது. மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகஸ்ட் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழத்தில் உள்ள படிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணைய முகவரி: www.pondiuni.edu.in

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் இங்கு இலவசமாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x