Last Updated : 19 Aug, 2021 03:12 AM

 

Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM

காரைக்குடி அருகே தந்தையின்றி குடும்ப வறுமையிலும் ஆன்லைனில் படித்துக்கொண்டே பழம் விற்கும் பிளஸ் 2 மாணவி

காரைக்குடி

காரைக்குடி அருகே தந்தையை இழந்த பிளஸ் 2 மாணவி குடும்ப வறுமையால் நாவற்பழம் விற்பனை செய்து வருகிறார்.

காரைக்குடி அருகே நைனா பட்டியைச் சேர்ந்த மாணிக்கம், ராதா தம்பதி மகள் அஞ்சுகா (17). இவர் கானாடுகாத்தானில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தந்தை இறந்தநிலையில், அவரது சகோ தரர் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இருந்தபோதிலும் போதிய வருமானம் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

குடும்ப வறுமை காரணமாக மாணவி அஞ்சுகா நாவற்பழம் விற்பனை செய்கிறார். தற் போது கரோனாவால் பள்ளி மூடியிருப்பதால் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கின்றன.

இதனால் அஞ்சுகா மொபைல் போன் மூலம் ஆன்லைனில் படித்துக்கொண்டே பழங்களை விற்பனை செய்து வருகிறார்.

இது குறித்து அஞ்சுகா கூறி யதாவது: எனக்கு இரண்டு அக்காள், ஒரு அண்ணன், ஒரு தங்கை உள்ளனர். இரண்டு அக் காள்களுக்கு திருமணமாகிவிட் டது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணன் மட்டுமே வேலைக்குச் செல்கிறார். இருந்தபோதிலும் வருமானம் பற்றவில்லை. கடந்த ஐந்து ஆண் டுகளாக சீசனுக்கு ஏற்ப பழங்களை விற்பனை செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தில் எனது படிப்புச் செலவுக்குப் போக, மீதியை குடும்பத்துக்குக் கொடுப் பேன்.

தற்போது ஆன்லைன் வகுப் புக்காக வாங்கிய மொபைல் போன் கடனையும் அடைத்து வருகிறேன். பள்ளி திறந்திருந்த காலத்தில் ஓய்வு நேரம், விடுமுறை நாட்களில் வியாபாரம் செய்வேன். தற்போது கரோனாவால் பள்ளி மூடியிருப்பதால் தினமும் பகலில் பழங்களை விற்பனை செய்கிறேன்.

இதற்காக அதிகாலை 5 மணிக்கே எழுந்து மானகிரி பகுதி யில் உள்ள மரங்களில் இருந்து நாவற்பழங்களைப் பறித்து வந்து விற்பனை செய்கிறேன், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x