Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’- படிப்பறிவோடு திறனும் சேர்ந்து செயல்பட்டால் ‘அலைடு ஹெல்த் சயின்சஸ்’ துறையில் வளர்ச்சி பெறலாம்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

படிப்பறிவோடு திறனும் சேர்ந்து செயல்பட்டால் ‘அலைடு ஹெல்த் சயின்சஸ்’ துறையில் நல்ல வளர்ச்சியை அடைய முடியும் என்று‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரி வித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 13-ம் தேதி நடந்த 16-வது நிகழ்வில் ‘அலைடு ஹெல்த் சயின்சஸ்’ எனப்படும் துணை மருத்துவப் படிப்புகள் குறித்து இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

சென்னை சவீதா காலேஜ் ஆஃப்அலைட் ஹெல்த் சயின்சஸ்முதல்வர் டாக்டர் டி.ஜெகதீஸ்வரன்: இந்திய சுகாதாரத் துறையில் உடனடியான மாற்றங்கள் சில ஆண்டுகாலமாக நடைபெற்றுவருகின்றன. நம் நாடு சுகாதாரத்துறையில் வருமானம் ஈட்டுவதிலும்,வேலைவாய்ப்புகளை வழங்குவ திலும் முன்னோடி நாடாக உரு வாகி வருகிறது.

கரோனா தொற்று பலருக்கும்படிப்பினைகளைத் தந்துள்ளது. மருத்துவத் துறையின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அலைட் ஹெல்த் புரபஷனல் துறையானது, தற்போது தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிவருகிறது. 60 முதல் 80 சதவீத அலைடு ஹெல்த் புரபஷனல்ஸ், டெக்னாலஜி துறைசார்ந்தவர்களாகவே உள்ளனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இணைப் பேராசிரியர் டாக்டர் என்.ஹரிவெங்கடேஷ்: ஹெல்த் ஹேர் என்பது ஒரு கூட்டுச் செயல்பாடாகும். பல துறையைச் சேர்ந்தவர்களும் இந்த ஹெல்த் கேரில் இணைந்திருக்கிறார்கள். டாக்டர், டென்ட்டிஸ், நர்ஸ், பிசியோதெரபி, ஃபார்மசிஸ்ட், லேப் டெக்னீஷியன், மெடிக்கல் அட்டெண்டர், டயட்டீஷியன், ஆப் டோமெட்ரிஸ்ட், டெக்னாலஜிஸ்ட் இவையெல்லாம் சேர்ந்தே ஹெல்த் கேர். இதில் ஒருவர் தனது பங்களிப்பைச் சரிவர செலுத்தத் தவறினாலும் ஹெல்த் கேர் சிஸ்டம் பாதிப்படைந்துவிடும்.

பிளஸ் 2 முடித்த பிறகு படிக்கும் ‘ஏஎன்எம்’ எனப்படும் கம்யூனிட்டி நர்ஸ் படிப்பு 2 வருடமும், ‘ஜிஎன்எம்’ நர்சிங் என்பது 3 வருடமும் படிக்கிற படிப்பாகும். பிஎஸ்சி நர்சிங்என்பது 4 வருட படிப்பாகும். இதை முடித்த பிறகு, மேற்படிப்பாக எம்எஸ்சி நர்சிங் படிக்கலாம். டிப்ளமோ ஃபார்மஸி 2 வருடப் படிப்பாகும். ஹெல்த் கேர் துறையில் எந்தப் படிப்பை படித்தாலும் அதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.

சென்னை எம்ஜிஎம் ஹெல்த் கேர் ஆலோசனைக்குழு இயக்குநர் யு.கே.அனந்தபத்மநாபன்: நாட்டில் மக்கள் தொகை பெருக்கமும், மத்தியதர வர்க்கத்தினருக்கு கிடைத்த வருவாயும் சுகாதாரத்துக்கென பணத்தை செலவிட வைத்துள்ளது. தொடர்ந்து, பெரிய தனியார் மருத்துவமனைகளும், நவீன மருத்துவ தொழில்நுட்ப பரிசோதனைக் கருவிகளும் பயன்பாட்டுக்கு வந்தன. பின்னர் ஹெல்த்கேர் ஐடி வளர்ச்சி அடைந்தது.

மருத்துவர்களே, நர்ஸ்களேஎல்லாவற்றையும் செய்ய முடியாத நிலையில், பல பிரிவுகளைக் கொண்டதாக விரிந்து,பலருக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

அலைடு ஹெல்த் ஹேர் கோர்ஸ் களாக ஆபரேஷன் தியேட்டர் & அனிதீஸ்ஷியா டெக்னாலஜி, ஆக்ஸிடென்ட் & எமர்ஜென்ஸி கேர்
டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர்டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, மெடிக்கல் சோஷியாலஜி என 20-க்கும் மேற்பட்ட இளங்
கலை படிப்புகள் உள்ளன. நீங்கள் மருத்துவமனை வசதியுள்ள இன்ஸ்டிடியூட்டில் படித்தால் செய்முறை பயிற்சிக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். படிப்பறிவோடு நம்மிடமுள்ள திறனும் சேர்ந்து செயல்பட்டால் அலைடு ஹெல்த் சயின்சஸ் துறையில் நல்ல வளர்ச்சியை அடைய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின. இந்தநிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x