Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி 20 நாட்களாகியும் உயர் கல்வியில் சேர அறிவிப்பு வெளியிடாத சென்டாக்: தனியாருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்

தேர்வு முடிவுகள் வெளியாகியும் மருத்துவம், பொறியியல், கலைஅறிவியல் படிப்புகளில் சேரசென்டாக் அறிவிப்பு வெளியிட வில்லை. தனியாருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, 'சென்டாக்' மூலம் நடத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பம் விநியோ கம், கலந்தாய்வு ஆகியவை ஆன் லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வுமுடிவு, கடந்த ஜூலை 19-ம்தேதி வெளியானது. புதுச்சேரி,காரைக்காலில் மொத்தம் 14,674பேர் தேர்ச்சி பெற்றனர். அவர் களுக்கு தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

அதையடுத்து உயர்கல்வி சேர்க்கைக்கு 'சென்டாக்' மூலம்விண்ணப்பங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என மாண வர் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால் அதுபற்றிய அறிவிப்பை கிட்டத்தட்ட இருபது நாட்களாகியும் இதுவரை சென்டாக் நிர்வாகம் வெளியிட வில்லை.

எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழில் படிப்புக ளில் 5,464 இடங்கள் சென்டாக் மூலம் நிரப் பப்பட உள்ளன. இது மட்டுமின்றி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 4,260 இடங்கள், நுண்கலை படிப்புகளில் 90 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. 'லேட்ரல் என்ட்ரி இன் ஜினியரிங்' படிப்பில் 426, உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் 175 இடங்களும் சென்டாக் வாயிலாக நிரப்பப்படுகின்றன. மொத்தம் 10,415 இடங்கள் சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன.

தாமதம் தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் கூறுகையில், “முதலில் சென்டாக் தரப்பில் கேட்டதற்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். சிபிஎஸ்இ முடிவு வந்தவுடன் சென்டாக் விண் ணப்பம் தரும் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றிருந்தனர். தற்போது நீட் தேர்வை காரணம் காட்டுகிறார்கள். உண்மையில் தனியாருக்கு ஆதரவான செயல் பாட்டில் சென்டாக் செயல்படுகிறது. இது தவறான போக்கு. உடன டியாக ஆன்லைனில் சென்டாக் விண்ணப்பம் தரும் தேதியை வெளியிட வேண்டும்” என்று குறிப் பிட்டனர்.

அதேபோல் தற்போதைய மத்திய அரசு உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 50 சதவீத தனியார் மருத்துவ இடங்களை அரசு தரப்பில் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அரசு தரப்பு இதில் மவுனம் காத்து வரு வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x