Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM

குறைந்த அளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்; சட்டப்பேரவை கூடும்போது ‘நீட்' விவகாரத்தில் நல்ல தீர்வு: மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை

நீட் தேர்வு எழுத தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பித்துள்ளது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூடும்போது இதற்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் 3-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வி.என்.நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

செப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதையடுத்து, பள்ளிகள் திறப்புக் கான நிலையான செயல் திட்டங் கள் குறித்து நாளை (இன்று) ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதில் பள்ளிகள் எந்தளவுக்கு தயாராக இருக்க வேண்டும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் எந்தளவுக்கு முன் னெச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என்பது குறித்து ஆலோசிக் கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களில் பெரும்பாலா னோர் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மாணவர்களின் இடைநிற்றல் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அந்த அறிக்கை கிடைத் தவுடன் அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு எழுத அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பித்துள்ளதற்கு கரோனா காலத்தில் பள்ளிக்குச் சென்று முறையாக படிக்க முடியாததே முக்கிய காரணம்.

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. சட்டப்பேரவை கூடும் போது இதற்கான நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.

தற்போதைய நிலையில், நீட் தேர்வு தொடர்பாக மாணவர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்.

தமிழகத்தில் நீட் தேர்வு வைக்கக்கூடாது என்பதுதான் அரசின் முடிவு. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு கோரும் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜன், பகுதி செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x