ஆக. 3-ல் தொலைதூர கல்வி பருவத் தேர்வுகள்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆக. 3-ல் தொலைதூர கல்வி பருவத் தேர்வுகள்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

தொலைதூரக் கல்வி பருவத் தேர்வுகள் ஆகஸ்ட் 3-ம் தேதிதொடங்க உள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இக்னோ பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) எஸ்கே. ஷெரீனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொலைதூரக் கல்வி 2021 ஜுன் பருவ இறுதி தேர்வுகள் (முதுகலை, இளங்கலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள்) ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகின்றன. சென்னை மண்டலத்தில் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 மையங்கள் சிறைக் கைதிகளுக்கான மையங்களாகும். இதற்கான ஹால்டிக்கெட்டை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in)பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால்டிக்கெட் இல்லையென்றாலும் தேர்வு எழுதுவோரின் பெயர் பட்டியலில் பெயர்இருந்தால் அத்தகைய தேர்வர்களை தேர்வெழுத அனுமதிக்குமாறு தேர்வு மையங்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வறையில் செல்போனுக்கு அனுமதி கிடையாது. தேர்வறையில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in