Published : 26 Jul 2021 04:40 PM
Last Updated : 26 Jul 2021 04:40 PM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: எப்படி?- முழு விவரம்

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் 1,547 அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 143 கலை, அறிவியல் கல்லூரிகள் அரசு நடத்துபவை. இதில், 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டன. இதற்கிடையே கரோனா தொற்றால் கடந்த ஆண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை இணையவழியில் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல இந்த ஆண்டும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. அதன்படி, இணையவழியில் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பித்து வருகின்றனர். ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அரசுக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். இதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்தினால் போதும். இந்தக் கட்டணத்தை இணையம் மூலமாகச் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்த முடியாத மாணவர்கள், உதவி மையங்கள் மூலம் The Director, Directorate of Collegiate Education, EVK Sampath Building, College Road, Chennai- 6 என்ற பெயரில் வங்கி வரைவோலையாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: 044-28260098, 044-28271911

விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதைக் காண: https://www.tngasa.in/images/Required-Documents.pdf

மாதிரி விண்ணப்பப் பதிவேற்றத்தைப் பார்க்க: https://www.tngasa.in/images/instructionintamil.pdf

இதையே காணொலியாக யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=irLPNt7ax-o

மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க: https://www.tngasa.in/pages/forms/application_preview.php?checkbox=check&submit=

சமீபகாலமாகவே, பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைக் காட்டிலும் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக அனைத்துக் கல்லூரிகளிலும் இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x