Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - எதிர்காலத்துக்கு ஏற்ற ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சிறப்பான எதிர்காலத்துக்கு ஏற்ற படிப்புகளாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள் விளங்குகின்றன என்று ‘இந்து தமிழ் திசை’நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்றதொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 10 நாட்கள் நடக்க உள்ளது.

கடந்த 24-ம் தேதி நடந்த 7-வது நிகழ்வில் ‘ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள்’ என்றதலைப்பில் இத்துறை வல்லுநர்கள் பேசியதாவது:

ஆந்திரா ஸ்ரீசிட்டியில் உள்ளஅல்ஸ்ட்டம் (ALSTOM) குவாலிட்டிடைரக்டர் எஸ்.சண்முகசுந்தரம்: பொறியியல் துறையின் ஒருங்கிணைந்த படிப்புகளாக மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் படிப்புகள் விளங்குகின்றன. ‘மெக்கானிக்கல் படித்தால் கடினமான வேலைசெய்ய வேண்டும், சம்பளம் குறைவாக கிடைக்கும்’ என்ற எண்ணம் தவறானது. இன்று அனைத்து பெரிய நிறுவனங்களிலும் மெக்கானிக்கல் படித்தவர்கள் நல்ல வேலையில் இருக்கின்றனர், அதிகசம்பளம் பெறுகின்றனர். முன்புகம்பெனிகள் குறைவு. தற்போது மகேந்திரா, மாருதி. ஹோண்டா என பல நிறுவனங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் கம்பெனிகள் தொடங்குவதற்கான சிறந்தமாநிலமாக தமிழகம் உள்ளது.

மெக்கானிக்கல் படிப்பை பொருத்தவரை மெக்கட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ், நானோ டெக்னாலஜி, நியூ மெட்டீரியல், கம்ப்யூட்டர் எய்டட், ஜியோமெக்கானிக்கல் என பல நவீன படிப்புகளுடன் பெரிய துறையாக வளர்ந்துள்ளது. 4.0 எனப்படும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்த துறையிலும் நல்ல வளர்ச்சியும், அதிகதேவையும் ஏற்பட்டுள்ளது. மெக்கானிக்கல் படித்து வருபவர்களிடம் கம்பெனிகள் ஏராளமான புதியகண்டுபிடிப்புகளை எதிர்பார்க்கின்றன. சிறப்பான எதிர்காலத்துக்கு ஏற்றதாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள் உள்ளன.

சென்னை ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் எம்.ஜெய்குமார்: பிளஸ் 2 முடித்த பிறகு
என்ன படிக்க வேண்டும் என்பதை பெற்றோரோ, நண்பரோ தீர்மானிப்பதைவிட, தங்களுக்கான துறை எது என்பதை அந்த மாண
வரே தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிறப்பான எதிர்காலத்தை அடைய முடியும். ஒரு படிப்பை விரும்பி எடுத்தால் அதில் மாணவர்களின் ஆர்வமும், பிரச்சினை வந்தால் அதை சமாளிக்கும் திறனும், கூடுதல் ஈடுபாடும் உருவாகும். என்றைக்கும் சிறப்பான எவர்கிரீன் படிப்புகளாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள் உள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்தில் கார் விற்பனை குறைந்தாலும், புதுப் புது கார்கள் தயாரிப்பில் கம்பெனிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. முன்பைவிட கார்கள் தயாரிப்பு அதிகரித்துள்ளது.

இத்துறையில் தற்போது படிப்பதற்கான பல புதிய பாடங்கள் அதிகஅளவில் உள்ளன. நிறைய சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. படிக்கும் கல்லூரிகளே மாணவர்களின் திறன் வளர்ப்புக்காக பல்வேறு கம்பெனிகளுக்கு அழைத்துச் செல்கின்றன. அங்குள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடச் செய்கின்றன. ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் இத்துறையில் படித்து, நல்ல வேலையில் சேர முடியும்.சென்னை கோகுல் ஆட்டோடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் பி.ஸ்ரீராம்:

வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இன்று மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் படிப்புகளுக்கான தேவையும், வேலை
வாய்ப்பும் அதிகரித்துள்ளன. இன்ஜினீயரிங் டெக்னாலஜி வந்தபிறகு அடைந்துள்ள பெரிய வளர்ச்சியால் நாட்டில் தொழில் வளம் பெருகியுள்ளது. இந்த தொழில்நுட்பம் நமது பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை தந்துள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பில் தமிழகத்தில் இருந்துதான் 30 சதவீதஉதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. சென்னை அம்பத்தூர் எஸ்டேட், கிண்டி எஸ்டேட் போன்றவற்றில் பல நூறு உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இந்த படிப்பை படிக்கும்போது ஆர்வத்துடன் புரிந்து படிக்க வேண்டும். அப்போதுதான் புதுமையான கண்டுபிடிப்புகளை நம்மால் செய்ய முடியும். சிறு, குறு தொழில்செய்ய விரும்புவோருக்கு இத்துறை மிகவும் ஏற்றது. சிறு, குறு
தொழில் முனைவோருக்கு மத்திய,மாநில அரசுகள் பல உதவிகளை வழங்குகின்றன. தவிர, புதுமையான சிந்தனையுடன், குறைந்த முதலீட்டில் செய்யப்படும் எந்த தயாரிப்புக்கும் மார்க்கெட்டில் நல்லவரவேற்பு எப்போதும் உண்டு.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைனில் நடந்த இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்
படுத்தினார்.

இணையத்தில் முழு நிகழ்வையும் காணலாம்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/36ZIBR8https://bit.ly/3zzjDnE என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.
கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 10 நாட்கள் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x