Published : 24 Jul 2021 12:37 PM
Last Updated : 24 Jul 2021 12:37 PM

வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் நேற்று (ஜூலை 23) வெளியிட்ட அறிவிப்பு:

"சென்னை - 98, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேரப் பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல். மற்றும் ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றன.

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல். மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட / பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்குப் பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழக அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

விருப்பமுள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்புக்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்காணும் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம், தங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.200

தாழ்த்தப்பட்ட/ பழங்குடி பிரிவினருக்கு (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்யவேண்டும்) - ரூ.100

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் - 24.8.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணத்துக்கான ரூ. 200 (எஸ்.சி/எஸ்.டி - ரூ.100) வங்கி வரைவோலையினை 'The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai' என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)

இரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர்

மொபைல் எண்: 98841 59410

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்

மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்)

அம்பத்தூர், சென்னை 600 098.

தொலைபேசி எண். 044 - 29567885 / 29567886

இ-மெயில்: tilschennai@tn.gov.in".

இவ்வாறு தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x