Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM

கொடைக்கானல் அருகே சாலையில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் மாணவர்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலையோர தடுப்புச் சுவர்களில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் கூம்பூர்வயல் கிராம மாணவர்கள்.

கொடைக்கானல்

கொடைக்கானல் மலைப்பகுதி கூம்பூர்வயல் கிராமத்தில் செல்போன் தொடர்பு கிடைக்காததால் அப்பகுதி மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலைஓரத்தில் அமர்ந்து ஆன்லைன் வகுப்புக்களை கவனிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதி வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூம்பூர்வயல், புல்லூர் உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கிருந்து பள்ளிக்கு கொடைக்கானல் வந்து சென்ற மாணவர்கள், தற்போது கரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கூம்பூர்வயல், புல்லூர் கிராமபகுதிகளில் செல்போன் தொடர்பு கிடைப்பதில்லை. இதனால் செல்போன்கள் இருந்தும். இவற்றை எடுத்துக்கொண்டு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பிரதான சாலையோரம் உள்ள தடுப்புச் சுவர்களில் அமர்ந்துஆன்லைன் வகுப்புகளை கவனித்துவருகின்றனர். மலைப் பகுதியில்அடிக்கடி மழை பெய்துவரும்நிலையில் மாணவர்கள் மேலும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவசரத் தேவைக்கு கூட ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து சிக்னல் கிடைக்கும் பகுதியில் இருந்து தகவலை தெரிவிக்க வேண்டியுள்ளது.

மலைக் கிராம மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயில இங்கு டவர் அமைத்து செல்போன் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x