Published : 16 Jul 2021 05:47 PM
Last Updated : 16 Jul 2021 05:47 PM

கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிப்பு; இலவச விடுதி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசத் தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது. 2021- 22ஆம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது.

மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டுத் தெரிவுப் பட்டியல் அமைக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

தெரிவு செய்யப்பெறும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஒளிப்பட நகல்கள் (ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம்) எடுத்துவரவேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்- 16.08.2021

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும்.

கல்விக் கட்டணம் - கிடையாது.

மாணவ, மாணவியர்க்குத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு,
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாம் முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி, சென்னை - 113, பேசி : 044-2254 2992.

சேர்க்கை தொடர்பான விதிமுறைகள்/ தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்’’.

இவ்வாறு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x