Last Updated : 16 Jul, 2021 04:53 PM

 

Published : 16 Jul 2021 04:53 PM
Last Updated : 16 Jul 2021 04:53 PM

கரோனா தன்னார்வலர்களாகப் பணியாற்றிய 119 மாணவர்கள்: தலா ரூ.10 ஆயிரம் அளித்து கவுரவித்த ஆளுநர் தமிழிசை

கரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களாகப் பணியாற்றிய துணை மருத்துவக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 119 பேருக்குத் தலா ரூ.10 ஆயிரம் சிறப்பூதியத்தை ஆளுநர் தமிழிசை இன்று வழங்கி கவுரவித்தார். இளைஞர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அரசுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்களின் பங்களிப்பை, குறிப்பாக துணை மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 119 மாணவர்களுக்குத் தலா ரூ.10,000 வீதம் சிறப்பூதியத்தை ஆளுநர் தமிழிசை வழங்கினார்.

சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்த விழாவில், பொதுப்பணித் துறைச் செயலர் மற்றும் கரோனா பொறுப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறைச் செயலர் அருண், அன்னை தெரசா நிறுவனத்தின் புல முதல்வர் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், "புதுச்சேரியில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தன்னார்வலர்கள், குறிப்பாக இளைஞர்கள் பக்கபலமாகச் செயல்பட்டார்கள். இளைஞர்களின் ஒத்துழைப்பு கரோனா முன்னணிப் பணியாளர்களுக்கு அதிக பலத்தைக் கொடுத்தது. இக்கட்டான சூழ்நிலையை மிகச் சிறப்பாகக் கையாளத் துணைபுரிந்திருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையைக் கையாளுவதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

களப் பணியாளர்களாகச் செயல்பட்டிருப்பதால் கரோனா உங்களை அனுபவசாலிகளாக மாற்றி இருக்கிறது. வேறு எந்த மாநிலத்தை விடவும் புதுச்சேரியில் கரோனா சிறப்பான முறையில் கையாளப்பட்டிருக்கிறது என்பதில் நமக்குப் பெருமை உண்டு. கரோனா நமக்குப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள நட்பு, உறவு, பண்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான, அனுகுவதற்கான சூழலைத் தந்திருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் சேவை மனப்பான்மைபோடு பணியாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x