Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM

மாணவர்களுக்கு வீடு வீடாக நூலக சேவை: அரசு உதவி பெறும் பள்ளியின் முயற்சிக்கு வரவேற்பு

பேரையூர் அருகே எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலை பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று நூலக புத்தகங்களை வழங்கும் ஆசிரியர்கள்.

மதுரை

50 கிராமங்களில் வசிக்கும் 1000 மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று நூலக சேவையில் ஈடுபட்டுள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் செயல்பாடு மா ணவர்கள், பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே படிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற நிலையில் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி.

இப்பள்ளி நூலகத்திலுள்ள 1500-க்கும் அதிகமான புத்த கங்களை ஆசிரியர்கள் மாண வர்களின் வீடு வீடாக தேடிச்சென்று விநியோகித்து வருகின்றனர். இது மாணவர்களிடம் மட்டுமின்றி, பெற்றோர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து எஸ்.கோட்டைப் பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஜெகதீசன் கூறியதாவது:

மாணவர்கள் பள்ளிக்கு வராததால் பள்ளி மட்டுமின்றி விளையாட்டு மைதானம், நூலகம் என மாணவர்களுக்கு பயனளிக்கும் பல இடங்கள் காட்சி பொருளாகிவிட்டன. ஆன்லைன் கல்வி நேரம் போக மீதி நேரம் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

பேரையூர், சிக்கனக்கட்டளை, சேடப்பட்டி வீரலம்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரம் மாணவர்கள் எங்கள் பள்ளி யில் படிக்கின்றனர். நூலகத்தில் உள்ள புத்தகங்களை வேன் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குகிறோம். இதற்காக 5 ஊர்களுக்கு ஒரு ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட் டுள்ளார்.

10 முதல் 15 நாட்களுக்கு ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் வழங்குகிறோம். மீண்டும் சேகரிக்கப்படும் புத்தகம் வேறு மாணவர்களுக்கு மாற் றப்படுகிறது.

வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் பல கேள்விகள், போட்டிகள், குறிப்புரை எழுதுதல் என பல்வேறு வழிகளில் போட்டிகள் நடத்தி பரிசுகளையும் வழங்குகிறோம்.

மாணவர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்களிடத்திலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆசி ரியர்களை நேரில் பார்க்கும் மாணவர்களின் மனநிலையிலும் நம்பிக்கை ஏற்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x