Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, எஸ்ஐபி அபாகஸ் சார்பில் மாணவர்களுக்கான அபாகஸ் முகாம்: ஆன்லைனில் இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், எஸ்ஐபி அபாகஸ் (SIP abacus) சார்பில் பள்ளி மாணவர்களுக்காக அபாகஸ் முகாம் ஆன்லைனில் இன்று (ஜூலை 2) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், எஸ்ஐபி அபாகஸ் உடன் இணைந்து ஆன்லைன் அபாகஸ் முகாமை இன்று முதல் 3 நாட்கள் நடத்த உள்ளது.

இந்த முகாமில் மாணவர்களின் கவனிக்கும் திறன், கணிதத் திறன், படித்ததை நினைவூட்டுதல், தன்னம்பிக்கை, பார்த்ததை நினைவில்வைத்தல் ஆகிய திறன்களை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். தினமும் மாலை 5 முதல் 6 மணிவரை நடைபெறும் இம் முகாமில் 6 முதல் 12 வயது வரையுள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு குழுவும்10 மாணவர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனி கவனம் செலுத்தி, பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும்.

அபாகஸ் பயிற்சியை செயலி (APP) மூலம் கற்றுக்கொள்ள செல்போனும், ZOOM APP வழியாக நேரடியாகப் பங்கேற்க லேப்டாப்பும் இருப்பது அவசியம்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ரூ.294/- பதிவுக் கட்டணம் செலுத்தி https://bit.ly/3y2CKWK என்ற லிங்க்கில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9791605238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x