Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் 75% மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாநிலம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகளில் கல்வித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இதுதவிர உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தனியார் பள்ளிகள்75 சதவீதம் மட்டுமே கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சீருடை, பேருந்து உட்பட இதரகட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது.

புகார் வரக் கூடாது

அதேபோல், மாணவர் சேர்க்கை விவரங்களை பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை தளத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து எவ்வித புகார்களும் வராதவண்ணம் பள்ளிகள் செயல்பட வேண்டும். மீறினால் துறைசார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீருடை, பேருந்து உட்பட இதர கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x