Published : 19 Jun 2021 03:13 AM
Last Updated : 19 Jun 2021 03:13 AM

தேசியத் திறனாய்வு முதல்நிலை தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவர்கள் 9 பேர் தேர்வு

தேசிய திறனாய்வு என்டிஎஸ்இ ( NTSE ) முதல்நிலை 2020-21 தேர்வில் புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் 9 பேர் இரண்டாம் நிலை தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். முதல் 10 இடங்களில் 5 இடங்களை இப் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

டெல்லி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி மாநில அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-21 ம் கல்வி ஆண்டிற்கான , தேசியத் திறனாய்வுஎன்டிஎஸ்இ (NTSE) முதல் நிலை தேர்வு கடந்த 2020 டிசம்பர் மாதம் 13 -ம் தேதி நடத்தப்பட்டது .

காரைக்கால் , மாஹே , ஏனாம் உட்பட புதுச்சேரி மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 3,863 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

புதுச்சேரி, ஆதித்யா வித்யாஷ் ரம் பள்ளியில் படிக்கும் பிரனீத், சௌமியா, லோகேஷ்வரன், வெற்றிவேல், நஸ்ரின், அக்ஷதா, பூவினியா, தயனீஸ்வர் சேரன், தினேஷ் குமார் ஆகிய 9 மாணவர்களும் தரவரிசை முறையில் 1,2,3,4,9,11,12,17 மற்றும்18-ம் இடங்களில் தேர்வாகியுள் ளனர்.

மேலும் தேசியத் திறனாய்வு என்டிஎஸ்இ முதல் நிலைத் தேர்வில் முதல் பத்து மாணவர்களில் 5 மாணவர்கள் ஆதித்யா பள்ளி மாணவர்களாவார்கள்.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்டிஎஸ்இ தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முனைவர் பட்டம் பெறும் வரை உதவித்தொகை வழங்கும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் , 2 ஆம் நிலை தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கும் முறையே ரூ .5,000 மற்றும் ரூ .10,000 ஊக்கத்தொகையாக புதுச்சேரி அரசு வழங்கும்.

ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த்,  வித்ய நாராயணா அறக்கட்டளை அறங்காவலர் அனுதா பூனமல்லி ஆகியோர்முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். பள்ளி முதல்வர்,துணை முதல்வர்கள், கல்வி இயக் குநர்கள், பொறுப்பாசிரியர்கள் ஆகியோரும் இம்மாணவர்களை வாழ்த்திப் பாராட்டினர்.

‘NTSE , NEET , JEE , KVPY , CA CPT போன்ற தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் குருகிராம் மற்றும் பொறையூர் பள்ளி களுக்கு ஆறாம் வகுப்பு முதல் ஒருங்கிணைந்த சிறப்பு கல்வி பயிற்சியை ஆதித்யா கல்விக்குழுமம் அளித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x