

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 முதல் 12-ம் வரையிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான வழிகாட்டுதல் மையம் ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இணைய வழியில் வகுப்புகள் நடைபெறுகிறது.
இச்சூழ்நிலையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஏற்படும் அச்சத்தினை தவிர்க்கும் பொருட்டும், மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்க ஹெல்ப்லைன் எண் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணுவால் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், இணையவழி வகுப்புகளுக்கு தயார் செய்து கொள்வது குறித்தும் வாரநாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 9342033080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. பெருமாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம். சிவக்குமார், மாவட்ட தேசிய தகவல்மைய மேலாளர் தேவராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.