Published : 13 Jun 2021 03:11 AM
Last Updated : 13 Jun 2021 03:11 AM

ஓட்டல் மேலாண்மைக் கல்வி குறித்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’யில் ஆலோசனை: இணையவழியில் ஜூன் 19-ல் நடக்கிறது

‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்வில் ஓட்டல்மேலாண்மைக் கல்வி பற்றியஆலோசனை ஜூன் 19-ம் தேதிகாலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது.

பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். இதற்கிடையே, கரோனா பரவல், ஊரடங்கு காரணமாக வீடுகளில் இருக்கும் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் இணைய வழியில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆலோசனை நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் வழங்குகின்றன.

இந்த நிகழ்வு, வரும் ஜூன் 19-ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி, 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில், ஓட்டல் மேலாண்மைக் கல்வி பற்றி பிரபல கல்வியாளர்கள் உரையாற்றுகின்றனர். அதன்படி ‘தி ரெசிடன்ஸி ஓட்டல்ஸ்’ முதன்மை செயல்அதிகாரி பி.கோபிநாத், உலகசமையல் கலைஞர்கள் சங்கங்களின் கவுரவ உறுப்பினர் டாக்டர்செஃப் சவுந்தர்ராஜன், எஸ்ஆர்எம்இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் டாக்டர்ஆன்டனி அசோக்குமார் ஆகியோர்பங்கேற்று, ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. இதில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3ghbwp7 என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு 9840961923 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x