Last Updated : 12 Jun, 2021 09:54 PM

 

Published : 12 Jun 2021 09:54 PM
Last Updated : 12 Jun 2021 09:54 PM

நெல்லை மாவட்டத்தில் போதிய இடவசதியுள்ள பள்ளி வளாகங்களில் அடர்வனங்களை உருவாக்க திட்டம்

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டத்தில் போதிய இடவசதியுள்ள பள்ளி வளாகங்களில் அடர்வனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சூழலியலை மீட்டெடுப்போம் என்ற குறிக்கோளுடன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளி வளாகங்களிலும் உள்ள அனைத்து வகை மரங்கள், செடிகள், பறவையினங்கள், பூச்சியினங்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்திலுள்ள மரம், செடி மற்றும் உயிரினங்களை கணக்கெடுக்கும் பணிகளை முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

இவ்வாண்டு சுற்றுச்சூழல் தின குறிக்கோளான சூழலியலை மீட்டெடுப்பதற்கு ஏதுவாக அனைத்து வகை பள்ளிகளிலும் உயிரியல் வளங்களை வரும் 2022-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதிக்குள் கணக்கெடுத்து பதிவு செய்யவும், அவற்றை அனைவரும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல் போதிய இடவசதியுள்ள பள்ளிகளில் அடர்வனங்களை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறையின் உதவியும் நாடப்படும். கரோனா பெருந்தொற்று காலச்சூழல் சரியானவுடன் அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்புடன் சூழலியலை மீட்டெடுக்கும் இந்த திட்டப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் வி. டைட்டஸ் ஜான்போஸ்கோ, அமலா தங்கத்தாய், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல், தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை பொறுப்பாசிரியர்கள் பாக்கியநாதன், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரங்கள், செடிகள், உயிரினங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரம்:

மரங்கள்: வேப்பமரம்- 13, நெட்டிலிங்கம்- 15, புங்கன்- 11, அரசமரம், தங்கஅரளி, பாக்கு மரம், கறிவேப்பிலை, அத்தி, கொய்யா, எலுமிச்சை, மா, இலந்தை, கொடுக்காப்புளி- தலா 1, வலம்புரி, பன்றி வாகை, மஞ்சள் வாகை - தலா 3, பாதாம்- 4, மஞ்சணத்தி- 5, தேக்கு, சீத்தா- 2.
மூலிகை செடிகள்: அரளி- 3, பிரண்டை, மருள், தூதுவளை- தலா 1.

பறவைகள்: குயில், மரங்கொத்தி- தலா 2, அணில்- 10, மயில்- 4, வண்ணத்துப்பூச்சி (மஞ்சள்)- 10, வண்ணத்துப்பூச்சி (கருஞ்சிகப்பு)- 3.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x