Published : 10 Jun 2021 12:44 PM
Last Updated : 10 Jun 2021 12:44 PM

பொறியியல் மறுதேர்வுகள் ஜூன் 21-ல் தொடக்கம்: முழு அட்டவணை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 21ஆம் தேதி அன்று தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கரோனா தொற்று காரணமாகப் பொறியியல் படிப்புகளுக்கான 2020ஆம் ஆண்டு நவம்பர்/ டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், 2021-ம் ஆண்டு பிப்ரவரி/ மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.

இதற்கிடையே மறுதேர்வு மற்றும் 2021 ஏப்ரல்/ மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2-வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி தேர்வுகள் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதைப் போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும். வீட்டிலிருந்தே தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். தேர்வு காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வுகள் குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளைக் காண: https://www.hindutamil.in/news/vetrikodi/news/678411-instructions-to-the-students-for-the-november-december-2020-reexamination-and-april-may-2021-examinations.html

இந்நிலையில் தற்போது மறுதேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 21-ம் தேதி முதல் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, மதியம் இரு வேளைகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூலை 17-ம் தேதி முதல், தேர்வுகள் தொடங்க உள்ளன. இதுகுறித்த விரிவான தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

முழுமையான தேர்வுக் கால அட்டவணையைக் காண: https://aucoe.annauniv.edu/timetable.php

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x