Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

சிபிஎஸ்இ 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு தரவு அறிவியல் பாடம் அறிமுகம்

சென்னை

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6, 7, 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு இந்தகல்வியாண்டில் தரவு அறிவியல்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 23 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.இவற்றில் 68 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு,பாடத் திட்டம், தேர்வு வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ செய்து வருகிறது.

அந்த வகையில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு முறைகளில் சமீபத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து, இந்த (2021-22) கல்வியாண்டில் 6 முதல் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு தரவுஅறிவியல் (Coding and DataScience) என்ற புதிய தொழில்நுட்ப பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் சிபிஎஸ்இ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் வல்லுநர்கள் குழு உதவியுடன் இதற்கான பாடத் திட்டம், கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கைஅம்சங்களின்படி, மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக இப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x