

உலக சுற்றுச்சூழல் தினமானது ஒவ்வொரு வருடமும் ஜூன் 5-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1974-ம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினமானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு என்பது இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பல்லுயிர்ப் பெருக்கம் என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பேரிடர்க் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நேரடியாகப் போட்டிகளை நடத்த முடியாததால் இணையவழியில் வினாடி வினா போட்டியும், கலந்துரையாடல் நிகழ்வும் நடத்தப்பட உள்ளது. இணைய வழில் வினாடி வினா மற்றும் கலந்துரையாடலில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறப்பாக பதில் அளிக்கும் மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
இணைய வழிக் கருத்தரங்கு
ஜூன் 5 மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை “சுற்றுச்சூழலை மறுசீரமைக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும் உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவருமான மணி கலந்துரையாட உள்ளார்.
அதைத் தொடர்ந்து ”பல்லுயிர்ப் பெருக்கம்” என்ற தலைப்பில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் சான்றிதழும், இந்தக் கலந்துரையாடல்களின் முடிவில் கேட்கப்படும் வினாக்களுக்கு சரியாகப் பதில் அளிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மடிப்பு நுண்ணோக்கிகள் பரிசு
குறிப்பாக சுற்றுச்சூழலை மறுசீரமைப்பது சார்பாக, சிறப்பான கருத்துக்களைக் கலந்துரையாடலில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கிகள் பரிசாக வழங்கப்படும்.
பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் galilioscienceclub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 8778210926 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்ய: https://forms.gle/gPbpv668VaPMEPFN6
இணைய வினாடி வினாவுக்கு: https://forms.gle/Hs3GWYPQhftpxY2T6