Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’ வழங்கும் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்: மே 24 முதல் 21 நாட்கள் ஆன்லைனில் நடைபெறுகிறது

கரோனா பரவலால் வீடுகளிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு, கோடைகாலத்தைப் பயனுள்ள வகையில் மாற்றும் முயற்சியாக ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் குழந்தைகளுக்கான கோடைகால இணைய வழி பயிற்சி முகாம் மே 24-ம் தேதி தொடங்கி 21 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில் 4, 5 மற்றும் 6-ம் வகுப்பு குழந்தைகள் ஜூனியர் பிரிவிலும், 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.

இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனை அதிக நேரம்பயன்படுத்துகிறார்கள். இதனால் பல்வேறு உடல், மனரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகாமல் இருப்பதற்காக ‘கைட் பிரைன் இன்ஸ்டிடியூட்’ வழங்கும் 5 நாட்கள் பயிற்சி, ஸ்டார் கேசர் செயல்பாடுகள் பற்றி‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’வழங்கும் 5 நாட்கள் பயிற்சி, குழந்தைகளின் கற்றல் செயல்பாட்டுக்குப் பயனளிக்கும் வகையில் கைத்திறனை (கிராஃப்ட்) வளர்த்தெடுக்க ‘ஆர்ட்மேனியா’ வழங்கும் 6 நாட்கள்பயிற்சி, குழந்தைகளின் சொந்த இசை கற்பனைக்கு வாய்ப்பளிக்க ‘டும் டக்கா’ வழங்கும் 5 நாட்கள் பயிற்சி என மொத்தம் 21 நாட்களுக்கு இணைய வழியில் பயிற்சிவழங்கப்படும்.

தினமும் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பயிற்சியின் மூலம், குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சியளிக்கும் நல்ல பழக்கங்கள் உருவாக்கம் பெறுவதோடு, பாதுகாப்பான ஸ்மார்ட்போன் பயன்பாட்டையும், உணர்வுசார் நுண்ணறிவையும், மூளைக்கு சிறந்த ஆற்றலை அளிக்கும் விளையாட்டுகளையும் பெறுவதோடு, அவர்களின் படைப்பாற்றலும் மேம்படுத்தப்படும்.

இந்த முகாமில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக ரூ.2,359/- செலுத்த வேண்டும். பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/2RN0NsA என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். முகாமில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 3 மாத சந்தா இலவசமாக கிடைப்பதோடு, அனைவருக்கும் மின்சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சி நேரம் மற்றும் வகுப்பு அட்டவணை பங்கேற்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 90039 66866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x