Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டியில் இடிந்துவிழும் நிலையில் பள்ளி கட்டிடம்

உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டியில் அரசு பள்ளி கூடுதல் கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர்.

குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுங்கம்வசூலிக்கவும், இதர தேவைகளுக்காகவும் கட்டப்பட்ட கட்டிடங்கள்இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.அந்த வகையில், பெதப்பம்பட்டியில் ஆங்கிலேயரால் சுங்கம் வசூலிப்பதற்காக 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட ஓடு வேய்ந்த கட்டிடம், அரசு தொடக்கப் பள்ளியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இரண்டரை அடி அகலத்தில் அமையபெற்ற சுற்றுச் சுவர், தரையில் இருந்து சுமார் 25 அடி உயரத்தில் மர தடுப்புகளைக் கொண்டு ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை, மர ஜன்னல்கள், கதவு களைக் கொண்டுள்ளது.பராமரிப்புக்காக பெரிய அளவு தொகை ஏதுமின்றி, இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது இக்கட்டிடம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "100 ஆண்டுகளை நெருங்கும் ஆங்கிலேயர் கால கட்டிடம், இன்றளவும் கட்டுமான கலைக்கு உதாரணமாக திகழ்கிறது. ஆனால், இதே வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம், தரமற்ற கட்டுமானப் பணியால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x