Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

எஸ்ஆர்எம் - ‘தி இந்து’ குழுமம் இணைந்து நடத்தும் எஸ்ஆர்எம் மெய்நிகர் தொழிற்கல்வி வழிகாட்டி மாநாடு: மே 8, 9-ம் தேதி அமர்வுகளில் பங்கேற்க பதிவு செய்யலாம்

எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப மையம், ‘தி இந்து’ குழுமம் இணைந்து ‘எஸ்ஆர்எம் மெய்நிகர் தொழிற்கல்வி வழிகாட்டி மாநாடு2021’ நடத்தப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலைக்கு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பபடிப்புகள் எந்த அளவுக்கு பொருத்தமானது என்பது குறித்து 15 பிரிவுகளாக இணையவழியில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதன் முதல் அமர்வு நாளை (மே 8) நண்பகல் 12 மணிக்கு நடக்க உள்ளது. ‘பேரிடர் காலத்தின்போது நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருந்து செல்ல மாணவர்களுக்கு உதவுதல்’ என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெறும். பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் உள்ள இத்தருணத்தில் என்ன செய்வது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர் தங்கள் சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம். வல்லுநர்கள் குழுவில்‘ஸ்நேஹா’ அமைப்பின் நிறுவனரும், உளவியல் துறை தலைவருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், பெருநிறுவன பயிற்றுநர் நந்தினி ராமன், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி மாணவர் நலப் பிரிவு துணை இயக்குநர் பிரின்ஸ் கல்யாணசுந்தரம் இடம்பெற்றுள்ளனர். ‘தி இந்து’ உதவி ஆசிரியர் ராதிகா சந்தானம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்தஇலவச இணையவழி மாநாட்டில்பங்கேற்க விரும்புபவர்கள் http://bit.ly/SRMTHE1 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதன் அடுத்த அமர்வு மே 9-ம்தேதி காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. ‘கோவிட்-19 பாதிப்புக்கு பிந்தைய இந்தியாவில் உயர்கல்வி’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த அமர்வுக்கான வல்லுநர் குழுவில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x