Published : 30 Apr 2021 01:01 PM
Last Updated : 30 Apr 2021 01:01 PM

கேந்திரிய வித்யாலயா 1-ம் வகுப்பு சேர்க்கைத் தேதி நீட்டிப்பு; 9-ம் வகுப்பு நுழைவுத் தேர்வும் ரத்து

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர்வதற்கான சேர்க்கைத் தேதி கரோனா காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கியது. இதில் சேர இணையதளம் மூலமாகப் பெற்றோர்கள் விண்ணப்பித்தனர். இதற்குக் குழந்தைகளின் வயது மார்ச் 31, 2021-ன்படி, 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 7 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

பெற்றோர்கள் https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்தனர்.

பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் கட்ட சேர்க்கைப் பட்டியல் ஏப்ரல் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சூழலைப் பொறுத்து சேர்க்கைப் பணி அறிவிப்பு ஏப்ரல் 30-ம் தேதியைத் தாண்டி நடைபெறும் என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைப் பட்டியல் மற்றும் காத்திருப்புப் பட்டியல் குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 9-ம் வகுப்பு நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில், 9-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கே.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை காரணமாக கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x