Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

பாரத ஸ்டேட் வங்கியில் 5,000 எழுத்தர் பணியிடங்களுக்கு ஜுன் மாதம் தேர்வு

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.)காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜுன் மாதம் நடைபெற உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில், எழுத்தர்பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் போட்டித் தேர்வுமூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்குபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி., எஸ்டி. வகுப்பினருக்கு5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில்தளர்வு அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணிக்குதேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுஆகிய 2 தேர்வுகளை உள்ளடக்கியது. ஆன்லைன் வழியிலான முதல்நிலைத் தேர்வை ஜுன் மாதம் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெறுவோருக்கு முதன்மைத் தேர்வு ஆன்லைன் வழியாக ஜூலை 31-ம் தேதி நடைபெறும்.

தகுதியுடைய பட்டதாரிகள் www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் மே 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. எழுத்தர் பதவியில் சேருவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.29 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். அத்துடன், பட்டப் படிப்பு கல்வித் தகுதிக்கு 2 இன்கிரிமென்ட் பெறலாம்.

எழுத்தர் பணியில் இருந்துகொண்டு துறைத் தேர்வு எழுதி, அதிகாரியாகப் பதவி உயர்வு பெறவும் வாய்ப்புண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x