Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

கர்நாடகாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

பெங்களூரு

கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தக் கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நெருக்கடி காலத்தில் ஆன்லைனிலும் நேரடியாகவும் கல்வி போதிப்பதும், கற்பதும் பெரும் சவாலாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித்திறன் செயல்பாடுகளை மதிப்பிட்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எவ்வித மதிப்பீட்டு மதிப்பெண்களும் வழங்கத் தேவையில்லை. இவ்வாறு தேர்ச்சி அளிக்கப்படும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் பொது திறனாய்வு தேர்வு நடத்தி, அவர்களின் கற்றல் திறன் குறைபாடுகள் கண்டறியப்படும். 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் மே 1 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 15-ம் தேதி அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்.

இவ்வாறு அமைச்சர் சுரேஷ்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x