Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

இளம் விஞ்ஞானி பயிற்சி ரத்து: இஸ்ரோ தகவல்

சென்னை

கரோனா பரவலால் நடப்பு ஆண்டுஇளம் விஞ்ஞானி திட்டப் பயிற்சிதற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதன்மூலம் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையம், பெங்களூரு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், ஷில்லாங் வடகிழக்கு விண்வெளி செயலாக்க மையம் ஆகிய இஸ்ரோவின் 4மையங்களிலும் பயிற்சி வழங்கப்படும். அதன்படி கடந்த 2019-ம்ஆண்டில் 107 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில் கரோனா பரவலால் நடப்பு ஆண்டு யுவிகா பயிற்சி ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘‘தற்போதைய கரோனா சூழலில் ராக்கெட் ஏவுதல் பணிகளே பெரும் சவாலாக உள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு இடையே பயிற்சியை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, யுவிகா பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நோய் பரவல் தணிந்த பின்பு மாணவர்களுக்கு பயிற்சி தரப்படும். எனினும், கடந்த ஆண்டைப் போல் பள்ளி மாணவர்களுக்கு இணையவழியிலான போட்டிகள் நடத்தப்படும்’’ என்றனர்.

கரோனா பாதிப்பால் யுவிகா பயிற்சி கடந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x