Published : 18 Apr 2021 19:27 pm

Updated : 18 Apr 2021 19:27 pm

 

Published : 18 Apr 2021 07:27 PM
Last Updated : 18 Apr 2021 07:27 PM

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு; செயல்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு

tn-government-postpone-12th-exam
பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப். 18) வெளியிட்ட செய்தி வெளியீடு:


"வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை கீழ்க்கண்ட உத்தரவுகள் அமலில் இருக்கும்.

* பிளஸ் 2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், பிளஸ் 2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

* கல்லூரி / பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் கல்லூரி / பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

* கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!



கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்பிளஸ் 2 பொதுத்தேர்வுசெயல்முறை தேர்வுதமிழக அரசுCorona virusPlus 2 public examPractical examTamilnadu governmentONE MINUTE NEWSCORONA TN

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x