புதுவையில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 126 பள்ளிகளில் 7,500 பேர் பங்கேற்பு

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பிற்கான கணிணி அறிவியல் செய்முறைத் தேர்வில் கைகளில் கையுறை மற்றும் முகக் கவசத்துடன் பங்கேற்ற மாணவிகள்: படம் | எம்.சாம்ராஜ்.
புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பிற்கான கணிணி அறிவியல் செய்முறைத் தேர்வில் கைகளில் கையுறை மற்றும் முகக் கவசத்துடன் பங்கேற்ற மாணவிகள்: படம் | எம்.சாம்ராஜ்.
Updated on
1 min read

வெப்பநிலை பரிசோதித்து, கையுறை அணிந்து, தனிமனித இடைவெளி, முகக்கவசத்துடன் மாணவ, மாணவிகள் வருகை உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் இன்று பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்றன.

தமிழகத்தின் கல்வித் திட்டத்தைப் புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றுகின்றனர். பிளஸ் 2 தேர்வானது மே 3-ம் தேதி தொடங்கும் என்று தமிழகக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவும் சூழலில் 3-ம் தேதி தொடங்கும் தேர்வைத் தவிர இதர நாட்களில் ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வுகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது. கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றித் தேர்வுகள் நடந்தன. வரும் 22-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன.

புதுச்சேரியில் மொத்தம் 126 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கரோனாவால் அனைத்துப் பள்ளிகளும் அரசு செய்முறைத் தேர்வுகளுக்கான மையங்களாக மாற்றப்பட்டு இத்தேர்வு தொடங்கியது. மொத்தம் 377 ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக இருந்தனர்.

இதுபற்றிக் கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டதற்கு, "இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் தொழில்பிரிவுகளுக்கான செய்முறைத் தேர்வுகளில் 12,426 பேர் பங்கேற்கின்றனர். முதல் நாளில் 7,500 பேர் பங்கேற்றனர். தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை ஆகியவை அணிந்து தேர்வில் பங்கேற்றனர். மூன்று மேசைகளுக்குப் பொதுவாக ஒரு இடத்தில் சானிடைசர் பயன்படுத்தப்பட்டன.

மாணவ, மாணவியர் முதலில் கைகளைக் கழுவிய பின்னர் சானிடைசர் தரப்பட்டு, வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கையுறை தரப்பட்டு, தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களைக் கல்வித் துறையில் நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு ஆய்வு செய்தது" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in