தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்
Updated on
1 min read

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவி பிரணீதா தொடர்ந்து மூன்றாவது முறையாக மூன்று தங்கங்களை வென்று தேசிய சாம்பியனாகி சாதனை படைத்துள்ளார்.

சண்டிகரில் கடந்த ஏப்ரல் 1 முதல் 10-ம் தேதி வரை 57-வது தேசிய ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் புதுச்சேரியில் இருந்து 73 குழந்தைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று 37 பதக்கங்களை வென்றனர்.

தேசிய அளவிலான பதக்கங்களின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் முதலிடத்தையும், மகாராஷ்டிர மாநிலம் இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

இதில் புதுச்சேரி மாணவி பிரணீதா மூன்று தங்கங்களை வென்று மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேசிய சாம்பியன் ஆகியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "புதுச்சேரியில் தற்போது பத்தாம் வகுப்பு படிக்கிறேன். தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் பங்கேற்றேன்.

ரிங் 2 என்றழைக்கப்படும் 500 மீட்டர் பிரிவிலும், ரிங் 3 என்ற ஆயிரம் மீட்டர் பிரிவிலும், ரோடு 2 என்ற மூன்றாயிரம் மீட்டர் பிரிவிலும் தங்கம் வென்றேன். மொத்தம் மூன்று தங்கங்கள் வென்று தேசிய சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாகத் தொடர்ந்து வென்றுள்ளேன்" என்று பிரணீதா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in