Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை பணியை தொடங்க அறிவுறுத்தல்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

அரசுப் பள்ளிகளில் வரும் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கைதொடர்பான பணிகளை தொடங்கபள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டுப் பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும்இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுக்கான (2021-22) மாணவர் சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், தற்போது அரசுப்பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கரோனா பரவலால் பள்ளிகளைமுழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனினும், சுழற்சிமுறையில் ஆசிரியர்கள் தினமும்பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்விசார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம்கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால், அவர்களை முறையாகவரவேற்று, உரிய முன்விவரங்களை வாங்கி வைத்து, பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல, அரசுப் பள்ளிகளில்உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் தளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்துகொள்ளலாம்.

இந்த பணிகளின்போது கரோனாபாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகள் மூலம் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x