Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜுன் 14-ம்தேதி வரை நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டிருந்தது.
இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகை மே 13 அல்லது 15-ம் தேதி கொண்டாட வாய்ப்புள்ளதால் அன்றைய தேதிகளில் நடைபெறும் பொதுத்தேர்வை வேறு தேதிக்கு மாற்றியமைக்குமாறு மதுரை எம்பி சு.வெங்கடேசன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
மத்திய அமைச்சருக்கு அவர்எழுதியிருந்த கடிதத்தில், ‘‘முஸ்லிம் மாணவர்களை அவர்களின் முக்கிய பண்டிகை நாளில் தேர்வுஎழுத வைப்பது நன்றாக இருக்காது’’ என்று சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் கடிதமும் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், 10, 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகளுக்கு திருத்தப்பட்ட புதிய காலஅட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது.அதன்படி, மே 13-ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 12-ம்வகுப்பு இயற்பியல் மற்றும் பயன்பாட்டு இயற்பியல் தேர்வு, ஜுன் 8-ம் தேதிக்கும், ஜுன் 1-ம் தேதி நடைபெற இருந்த கணிதத் தேர்வு மே31-ம் தேதிக்கும், ஜுன் 2-ல் நடைபெறவேண்டிய புவியியல் தேர்வு ஜுன் 3-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல், மே 21-ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு கணிதத் தேர்வுஜுன் 2-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT